உடலில் ஏதாவது பூச்சி கடித்து விட்டால் அந்த நஞ்சு எப்படி போடுவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
உங்கள் உடம்பில் ஏதாவது விஷ பூச்சி கடித்து விட்டால் ஊமத்தைச் செடியின் பூ, இலை மற்றும் காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணையில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள் மற்றும் வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேள், பூரான் மற்றும் வண்டு போன்ற ஏதாவது ஒன்று கடித்து விட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து பற்று போட வேண்டும்.
ஊமத்தையை உட்புற உணவாக அல்லாமல் வெளிப்புறமாக எடுத்துக் கொள்வதுதான் நல்லது. தேள் கடித்துவிட்டால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.