உடலில் பூச்சிக்கடி, ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகள் நீங்க இதை மட்டும் செய்தால் விரைவில் குணமாகும்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதிலும் குறிப்பாக பூச்சிக்கடி, ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளுக்கு இயற்கை மருத்துவங்கள் மிகவும் சிறந்தது. அவ்வாறு இந்த பிரச்சனை நீங்க அவுரி வேர் பட்டையை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 10 மிளகைச் சேர்த்து 4 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். அந்த நீர் ஒரு டம்ளராக வற்றியவுடன் வடிகட்டி தினமும் இரு வேளை குடித்து வந்தால் காணாக் கடி, ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். அதன் இலையை அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளாட்டு பால் கலந்து அருந்த கல்லீரல் நோய்கள் குணமாகும்.