வாரத்திற்கு 2 நாட்கள் நாம் பாகற்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து என்ன தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
பாகற்காய் காய்கறிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு பொருள். ஆனால் இது கசப்புத் தன்மை கொண்டதால் பலரும் இதை பார்த்தாலே ஓட்டம் பிடித்து விடுவார்கள். இது கசப்பான ஒரு பொருளாக இருந்தாலும், இது உடலில் பல மாற்றங்களை கொடுக்கின்றது. பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லூடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமானது.
கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்
வாரத்திற்கு 2 நாட்கள் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினைகள் விரைவில் தீரும்.
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாகற்காய் மட்டுமின்றி அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தை கொண்டது.
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால் பாகற்காயை உணவில் சேர்த்து வாருங்கள். பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்க இது உதவுகிறது.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். இதனால் உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.
கசப்பை போக்குவது எப்படி?
பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதில் உப்பு மற்றும் புளிதண்ணிர் தெளித்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் உப்பு தண்ணீரை பிரித்து எடுத்துவிட்டு சமைத்தால் கசப்பு இருக்காது.
மெல்லியதாக நறுக்கிய பாகற்காய் அரை மணி நேரம் புளித்தண்ணீரில் ஊற வைத்து சமைத்தால் கசப்பு இருக்காது.
மெல்லிய துண்டுகளாக நறுக்கிய பின்பு அதன் கொட்டைகளை நீக்கி விட்டு இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது நேரம் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.