உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமி மிகவும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கே பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது தினமும் மந்திரவாதி தனக்கு தூக்கமாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தாகவும் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு பிரசாந்தை ஒன்றுகூடி தர்ம அடி அடித்தனர். பின்னர் சாலையில் இழுத்துச்சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.