இயக்குனர் மிஷ்கினின் ‘பிசாசு-2’ படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப்படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல் ,சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப்படத்தில் நாகா,ராதாரவி, பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் ‘பிசாசு -2’ தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளார் .
இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ‘சவரக்கத்தி’ பட நடிகை பூர்ணா இணைந்துள்ளார் . இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் .