கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் உருவான ‘பூமி’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், ஜன கன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் 28-வது படத்தை கல்யாண் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
–@actor_jayamravi's next with director #Kalyan – #JR28 Pooja happened today.@Screensceneoffl @priya_Bshankar @SamCSmusic @vivekcinema @sidd_rao @skiran_kumar @kabilanchelliah @onlynikil #MichaelRaj #VijayMurugan #Ganesh pic.twitter.com/rxAkuywEUK
— Nikil Murukan (@onlynikil) September 10, 2021
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் . ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.