விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அடுத்ததாக இவர் பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
And it begins… pic.twitter.com/Aryob8Ca51
— CS Amudhan (@csamudhan) November 25, 2021
தற்போது இவர் கொலை, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், கொலை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இந்த படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.