கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷேச பூஜைகள் செய்வதற்கு, இங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்களையும் மற்றும் கோவிலில் விற்கப்படும் பிரசாதங்களின் விலையையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த கட்டண விலை உயர்வானது ,வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் படி பூஜை, களபாபிஷேகத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- படி பூஜை ₹ 1,37,900
- உச்ச பூஜை ₹ 3,000
- பகவதி சேவை ₹ 2,500
- உஷ பூஜை ₹ 1500
- கணபதி ஹோமம் ₹ 375
- அப்பம் ஒரு பாக்கெட் ₹ 45
- அரவணை ₹ 100
- அபிஷேக நெய் ₹100 (100 மி.லி)