Categories
மாநில செய்திகள்

பூஜை செய்து கொண்டிருந்த பெண்…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தில் ஜெயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் முன்னாள் கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர் கணவர் சரவணபவன். இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சேலையில்  தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் மற்றும் உறவினர்கள் தீயை அணைத்தனர். அதன்பிறகு ஜெயலட்சுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |