கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தர்மமுனீஸ்வரன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி மலைராஜ் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த நிர்வாகிகள் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடு போன கோவில் உண்டியலில் 3,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்ததாக கோவில் பூசாரி தெரிவித்துள்ளார்.