Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்காக சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையப்பபுரத்தில் பூமிகாவலப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூஜை செய்வதற்காக காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 50,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக சௌந்தர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |