Categories
பல்சுவை

பூஜை பாத்திரங்கள் பளபளக்க…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதில் சில குறிப்பிட்ட நாட்களில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இறைவனை வழிபடும் போது நமக்கு நன்மைகள் கிடைக்கும்.  அதன்படி வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களை பளபளக்க செய்ய சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உப்பு, புளி, தண்ணீர் ஆகியவற்றை பேஸ்ட் ஆக கலந்து வைத்துக் கொள்ளவும். பூஜை பாத்திரத்தை சிறிது தண்ணீரில் முக்கி வையுங்கள். அதன்பிறகு நார் கொண்டு கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை தொட்டு தேயுங்கள். கழுவிய பிறகு காட்டன் துணியால் துடைத்துவிட்டு, அதே காட்டன் துணியில் விபூதியை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு தேய்த்துப் பாருங்கள். உங்கள் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

Categories

Tech |