Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூஜை பொருட்களை தூக்கி எறிந்து… அட்டகாசம் செய்த காட்டு யானைகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டி யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்தது. இதனை அடுத்து யானைகள் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இதனை தொடர்ந்து உபாசி பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகள் கோவில் கதவை உடைத்து கோவிலுக்குள் இருந்த பொருட்களை வீசி எறிந்து அட்டகாசம் செய்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் சத்தம் போட்டு காட்டி யானைகளை அங்கிருந்து விரட்டினர். இந்நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |