Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்தும் ஏன் இப்படி பண்ணுறீங்க…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வள்ளுவர் காலணியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் சம்பவத்தன்று தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 800 கிராம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும், 32000 ரூபாயையும் திருடியுள்ளனர்.

இதற்கிடையே வீட்டிற்கு திரும்பி வந்த கோபால் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |