பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது மூன்று பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் லென்ஸ் நகர் பகுதியிலுள்ள ஒரு வீடு சில நாட்களாகவே திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கபடவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
அப்போது வீட்டின் தரையில் ஒரு பெண்ணும், ஆணும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மேலும் படுக்கை அறையில் 15 வயது சிறுவன் இறந்த நிலையிலும் கிடந்துள்ளார். இதையடுத்து யாரேனும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதற்கான ஆதாரங்களைத் காவல்துறையினர் தேடியபோது எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.