Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிலிருந்த…. 20 பவுன் நகை & 40,000 பணம் கொள்ளை…. காவல்துறையினர் விசாரணை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்(67) – சந்தியா(60). இவர்களின் 2 மகள்கள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் திருச்சியிலுள்ள தங்களுடைய மகளை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலையில் அவர்களுடைய வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருபது பவுன் நகை மற்றும் 40,000 ரூபாய் பணம் திருடியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து கிடைத்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |