Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்தக்காரரை பார்க்க சென்றவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

மதுரையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் பல முயற்சிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் . அச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் . மேலும் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தினை கணினி மூலமாகவோ அல்லது நேரடியாக களத்தில் இறங்கியோ செயல்படுத்துகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலும் இதேபோன்ற ஒரு  திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. செல்லூரை சேர்ந்த  ராம்குமார் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்போது வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து , பீரோவில் இருந்த துணிகளை கீழே எறிந்து விட்டு அதிலிருந்த ரூபாய் 36 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர் . இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த ராம்குமார் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைக்குறித்து ராம்குமார் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் காவலர்கள் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |