மதுரையில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் கீரைத்துறையில் உள்ள குயவர் பாளையத்தில் மேரி என்பவர் வசித்து வருகிறார் . இவர் சுமார் 75 வயது மதிப்புத்தக்க பெண்மணி ஆவார் . இந்நிலையில் இவர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் .
பின்னர் திரும்பி வந்த மேரிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை எல்லாம் சிதறி போட்டுவிட்டு அதில் இருந்த ரூபாய் 11 ஆயிரத்தை சூறையாடி சென்றுள்ளனர் . இச்சம்பவம் குறித்து மேரி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.