Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய்-மகள்கள்…. நடந்தது என்ன?… தலைநகரில் பயங்கரம்….!!!!

தலைநகர் புது டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு 207-வது வீட்டில் மஞ்சு என்ற பெண் தன் இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு வீடு நேற்றுமாலை நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டி  உள்ளனர். எனினும் கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி குடியிருப்பு பகுதிக்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் ஒரு அறையில் மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு என 3 பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் திறக்கப்பட்டு அதிலிருந்து கியாஸ் வாயு வீடு முழுவதும் வீசியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த தற்கொலை கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கடந்த  வருடம் ஏப்ரல் மாதம்  மஞ்சுவின் கணவன்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அப்போது இருந்தே மஞ்சு மற்றும் இருமகள்களும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக இந்த தற்கொலை முடிவை எடுத்தனரா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |