Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… அதிகரித்து வரும் கொள்ளை சம்பவம்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆடிட்டராக பணிபுரியும் பூரண வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் அப்பகுதியிலுள்ள சொந்த வீட்டில் தங்காமல் நமனசமுத்திரத்திலுள்ள மற்றொரு வீட்டில் தங்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து புதுக்கோட்டையிலுள்ள வீட்டில் சென்று பார்க்கும் போது வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூரணவல்லி உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 90 பவுன்  தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து பூரணவல்லி புதுக்கோட்டையிலுள்ள  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |