ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விட்டு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பில் உள்ள கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடைக்கு வந்து பார்க்கும் பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர், பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர்களை தேடிவருகின்றனர்.