தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் வழங்குவதில் குளறுபடி என பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வாக்குச்சாவடி விபரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதில் குளறுபடி என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவு படி அரசு ஊழியர்களே பூத் ஸ்லீப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை முறையாக நடக்கவில்லை. ஒரு வீட்டில் 4 வாக்குகள் இருந்தால் ஒருவருக்கு மட்டுமே பூத் ஸ்லிப் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.