Categories
மாநில செய்திகள்

பூத் ஸ்லிப் வைத்து வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சியினர் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக வாக்காளர்களுக்கு வாக்களிக்க கொடுக்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளரின் புகைப்படம் இருக்கும்.

ஆனால் தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்கபடும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தகவல் வாக்குச்சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், நேரம் இவை மட்டும் இடம்பெற்றிருக்கும். இதில் வாக்காளர்களின் புகைப்படம் இருக்காது. வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து தினங்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு இந்த தகவல் சீட்டு அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப்பை ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Categories

Tech |