விலங்குகள் சில சமயம் ஒன்றுக்கொன்று சண்டையிடும் போது அந்த இடத்தையே ரளகளப்படுத்திவிடும். எனினும் சில வளர்ப்பு பிராணிகள் சண்டையிடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவளர்ப்பு பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும்போது, அவற்றின் சண்டையை மற்றொரு வளர்ப்பு பிராணி வந்து தடுத்து நிறுத்துகிறது. இக்காட்சியை இணையத்தில் பார்த்த பலரும் ரசித்து வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் ஒருஅறையில் 3 பூனைக்குட்டிகள் இருக்கிறது. இதில் ஒரு பூனைக்குட்டி சுவற்றின் ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருக்கிறது.
அதன்பின் மற்ற 2 பூனைக்குட்டிகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது போன்று நிற்பதையும் பார்க்க முடிகிறது. அந்த 2 பூனைக்குட்டிகளும் குத்துசண்டை போன்று ஒன்றுக்கொன்று கட்டிப்புரண்டு கொண்டிருக்கிறது. அப்போது தீடீரென்று ஒரு நாய்க்குட்டியானது பூனைக் குட்டிகளின் மீது விழுந்து சண்டையை நிறுத்துகிறது. அதன்பின் 2 பூனைக்குட்டிகளும் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்கிறது. அதில் 1 பூனைக்குட்டி நாயை தொட முயற்சி செய்யும்போது அந்த நாய்க்குட்டி ஓடிவிடுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவுக்கு ஆயிரத்திற்கு அதிகமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்துவருகிறது.
https://twitter.com/i/status/1532565235126702090