Categories
உலக செய்திகள்

பூனைக்கு வந்த வாழ்வ பாத்தீங்களா….? வெள்ளை மாளிகையை வலம் வரும் பூனை…. சுவாரஸ்ய தகவல் இதோ….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் வில்லோ என்ற பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு இரண்டு வயது ஆகிறது. ஜில் பைடன் வளர்த்து வரும் பூனையின் பெயர் வில்லோ. இந்தப்பெயரை ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூறும் வகையில் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜில் பைடன் தேர்தல் பரப்புரைகள் ஆற்றிக் கொண்டிருந்த போது திடீரென இந்த பூனை மேடையில் வந்து ரகளை செய்தது.

அப்போது அவர் ஜோ பைடன் அதிபரானால் வில்லோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்வோம் என்று கூறியிருந்தார். தற்போது ஜில் பைடன் முன்பு கூறியிருந்தது போல் வெள்ளை மாளிகைக்கு அவரது பூனையான வில்லோவை அழைத்து வந்தார். இதேபோல் 2009ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் இருந்தபோது பூனையை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |