கடலூர் மாநகர பகுதிகளில் நேற்று காலை ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டி பொதுமக்கள் வேடிக்கையாக பார்த்து சென்றுள்ளனர். அந்த சுவரொட்டியில் வெள்ளை நிற ஆண் பூனை, அதன் பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. அதன் பெயரை சொல்லி அழைத்தால் உங்களை பார்க்கும். எனவே அடையாளங்கள் சரியாக இருந்தால் பூனையின் போட்டோ அல்லது வீடியோ எடுத்து முகவரிக்கு அனுப்பி செல்போனை தொடர்பு கொள்ளவும். அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த சுவரொட்டி சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி வருகிறது.
Categories