தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியின் கொலை வழக்கில் நீண்டநாளுக்குப் பின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
விளாத்திகுளதில் உள்ள பல்லாகுளத்தில் வசித்து வந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிச்சாமி. 30 வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மாரிச்சாமி கடந்த 2014.செப்.8-ம் தேதி அன்று அதே பகுதில் வசித்த பூபதியின் டிராக்டரில், வீட்டின் அருகில் உள்ள குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மாரிச்சாமியின் உறவினர் முனியசாமி அங்கு வந்து உள்ளார்.
அதற்க்கு முன்னரே முனியசாமிக்கும், பூபதிக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. இதற்க்காக மாரிச்சாமியிடம், பூபதியின் டிராக்டரில் எதற்க்காக குப்பையை ஏற்றுகிறீர் என்று கேட்டுருக்கிறார். அப்பொழுது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த முனியசாமி, பக்கத்தில் கிடந்த மரகட்டையால் மாரிச்சாமியை தாக்கிவிட்டார். அதில் மயங்கி விழுந்த மாரிச்சாமியை மருத்துவமனையில் சேர்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி 2014.செப்.11-ம் நாள் அன்று பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சூரங்குடி காவல்துறை வழக்குபதிவு செய்து ,அதன் விசாரணை முதலாவது தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்து உள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட முனியசாமிக்கு நேற்று முன் தினம் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஹேமா ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் இந்த வழக்கில் ஆஜராகி வந்துள்ளார்.