Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூப்படைந்த பெண்களுக்கு…” இதை கட்டாயம் செஞ்சு கொடுங்க”…. கர்ப்பப்பை வலுவாகும்…!!

பூப்படைந்த பெண்களுக்கு, கருப்பை ஆரோக்கியமாக இருக்க நாம் சில உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பெண்கள் பூப்படையும் போது அவர்கள் உடலில் ஹார்மோன்கள் மாற்றமடையும். அது சிறப்பானதாகவும், கருப்பை வலுப்பெறவும் சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பூப்படைந்து முதல் மூன்று மாதங்களுக்கு நாம் சில உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் முதலில் சிவப்பரிசி புட்டு. அதில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்க்கலாம்.

சிவப்பு அரிசி புட்டு எப்படி செய்வது ?

ஒரு சிவப்பு அரிசி 1 கிலோ, அரிசி அரை கிலோ இட்லி அரிசியை கழுவி போட்டு போன்று அரைத்துக் கொள்ள வேண்டும் .அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, பின்னர் நெய், கொப்பரை தேங்காய், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், முந்திரி திராட்சை, பாதாம், பிஸ்தா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பெண்களுக்கு கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

நன்மைகள்:

ஏனெனில் சிவப்பு அரிசியில் வைட்டமின் பி1 பி3 பி6 போன்ற சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்து, மக்னீசியம் , மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் உள்ளது. இது பெண்கள் பருவமடையும் போது கொடுத்தால் மிகவும் நல்லது.

கொப்பரை தேங்காய் துருவல் வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற வல்லது. மாதவிடாய் சுழற்சி சீராக இருக்க இது மிகவும் உதவும்.

பூப்படைந்த காலத்தில் பெண்களுக்கு நல்லெண்ணெய் அதிக அளவில் கொடுப்பார்கள். அதேபோன்று நெய்யையும் நாம் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது தசைப்பிடிப்புகள் வலுவிழக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் இது ரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும் உகந்தது.

வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதில் இரும்புச் சத்துக்கள் உள்ளதால் பெண்களுக்கு இடுப்புக்கு வலிக்கு  மிகவும் நல்லது.

இவற்றை எல்லாம் நாம் கலந்து பூப்படைந்த பெண்களுக்கு நாம் கொடுக்கும் பொழுது அவை அனைத்தும் பெண் பிள்ளைகளை நலமாக வைக்க உதவும். மேலும் அவர்கள் பெரியவர்களாகி த் திருமணம் ஆனபிறகு பிள்ளைப்பேறு பெறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

Categories

Tech |