Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூப்பறித்து கொண்டிருந்த சிறுமி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தோட்டத்தில் வைத்து காட்டுப்பன்றி சிறுமியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள லாலாபுரத்தில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதி(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி முருகனின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு மல்லிகைப்பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பூ பறித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டுப்பன்றி சிறுமியை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சாப்டுர் வனச்சரக அலுவலர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |