ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவந்திகா, பாவல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#Boomika An Eco Horror dir by @RathindranR starring @aishu_dil @ActorVidhu @Pavelnavagethan https://t.co/SaWEU4fIWg
Premiers..@vijaytelevision on Aug 22, 3pm@NetflixIndia from Aug 23 @kaarthekeyens @Prithvi_Krimson @RobertoZazzara @EditAnand @StonebenchFilms @Sudhans2017
— karthik subbaraj (@karthiksubbaraj) August 16, 2021
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேரடியாக விஜய் டிவியில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்த படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பூமிகா படத்தின் பரபரப்பான புதிய டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெகுவாக வருகிறது.