நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் O2. இந்தப் படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜிகே.விஷ்ணு இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். படத்தில் நயன்தாராவின் மகனாக யூடியுப் குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடித்துள்ளார்.
படத்தில் நயன்தாராவின் மகனுக்கு சுவாசக் கோளாறு இருக்கிறது. அதற்காக கொச்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் போது சாலையில் விரிசல் ஏற்பட்டு பஸ் பூமிக்கு அடியில் சிக்கிக் கொள்கிறது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரின் அனைத்து காட்சிகளும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது.