Categories
உலக செய்திகள்

பூமிக்கு அருகிலுள்ள மேலும் ஒரு கோள் கண்டுபிடிப்பு… அதன் தூரம் எவ்வளவு தெரியுமா?

ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகாமையிலுள்ள கோளை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர்.

நாம் சிறுவயது முதலே விண்வெளியையும், அதனைப்பற்றியும் பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. அந்த வகையில் நமது சூரியமண்டலத்தில் இதுவரை நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்பது கோள்களும், அதனுடைய பெயர்களும் மட்டுமே.

அதன்பின் தற்போது நாட்கள் செல்ல செல்ல பூமியைப் போன்று வேறு ஏதேனும் கிரகங்கள் இந்த சூரிய மண்டலத்தில் உள்ளதா, அப்படி இருந்தால் அங்கும் மனிதர்கள் வாழ்கின்றனறா? இல்லை அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றார் போல் தட்பவெட்ப நிலைகள் உள்ளனவா? என்பது போன்று எல்லாம் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நியூயார்க்கைச் சேர்ந்த ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியிகள் பூமிக்கு மிக அருகாமையில் ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த கோளுக்கு ‘த பேபி ஜெயண்ட் பிளானட்’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து வானியல் ஆராய்ச்சியாளரான அன்னி டிக்சன் கூறுகையில், ‘நாங்கள் பூமிக்கு அருகாமையில் மிகவும் குளிர்ச்சியான, மங்கலான கிரகத்தை கண்டறிந்துள்ளோம். மேலும் அதன் நிறையானது வியாழனின் நிறையில் 10 விழுக்காடு மட்டுமே இருக்கும். அதனால் அக்கிரகத்தை ‘ த பேபி ஜெயண்ட் பிளானட்’ எனப் பெயரிட்டுள்ளோம்.

ஆனால், தற்போது அனைவர் மத்தியிலும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. பூமிக்கு அருகாமையில் என குறிப்பிடுகிறோம். ஆனால், நாம் ஏன் அதனை நம் கண்களால் பார்க்க இயலவில்லை என்ற கேள்வி பலரின் மனதிலும் தோன்றுவது இயல்பு தான். பொதுவாக நாம் வானியல் சார்ந்த விஷயங்களை ஒளி ஆண்டைக் கொண்டே கணக்கிட்டு வருகிறோம்.

அதாவது, ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஓராண்டில் செல்லும் தொலைவையே, நாம் ‘ஒளி ஆண்டு’ என கணக்கிடுகிறோம். அந்த வகையில் இந்த ‘பேபி ஜெயண்ட் பிளானட்’ பூமியிலிருந்து சுமார் 330 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது’ என்றார். மேலும் இந்த கிரகத்திற்கு அறிவியல் பெயராக 2 மாஸ் 1155-7919பி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது

Categories

Tech |