நம் பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னிட்டு நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாம் பின் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.