ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமதோனி(31),எல்ஹாம் சுப்தார்(24) ஆகிய இரண்டு பெண்கள் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இரண்டு பேர் மீதும் வட மேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இரண்டு பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹெங்காவ் குர்தீஸ் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் பூமியில் ஊழலை பரப்பியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் ஷரியத் சட்டத்தை மீறி இருக்கின்றனர். உர்மியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தண்டனை விவரம் தெரிவிக்கப்பட்டு விட்டிருக்கிறது என அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை ஈரான் நிதிதலை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பு அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories