கடலில் விழுந்த விண்கல்லை தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சூரிய குடும்பத்திற்கு அருகே இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டாமல் பூமியை வந்தடைந்துள்ளது. இந்த விண்கல் பப்புவா நியூக்கினியா பகுதியில் உள்ள கடலில் விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் ஆழ்கடலுக்குள் இறங்கி விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆவ்மூவாமூவா விண்கல் மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு போரிசோவ் விண்கல் என 2 விண்கற்கள் பூமியை வந்தடைந்துள்ளது.
இதற்கு முன்பாக பசிபிக் பெருங்கடலில் ஒரு விண்கல் விழுந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்தது. இந்த விண்கல் பற்றி ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவி லோயப் மற்றும் மாணவர் ஆமிர் சிராஜ் ஆகிய 2 பேரும் கண்டுபிடித்தனர். இந்த விண்கலுக்கு சி.என்.இ.ஓ.எஸ் 2014-1-08 என பெயரிட்டுள்ளனர். இந்த விண்கல்லின் பெரும் அளவு பகுதி எறிந்துவிட்டதாகவும் மீதமுள்ள பகுதி பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிக்குள் புதைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விண்கல்லை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.