நம்முடைய கேலக்ஸியில் பூமியை போன்ற இன்னொரு கோள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது விண்வெளிக்கு கெப்ளர் என்ற விண்கலம் பூமியை போன்று மற்றொரு கோள் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு நாசா பூமியை போன்று கெப்ளர் 452b என்ற ஒரு கோள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கெப்ளர் 452b என்ற கோளில் உயிரினங்கள் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள் பூமியில் இருந்து 1800 ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது.
இந்நிலையில் பூமி சூரியனை சுற்றி வருவது போன்று கெப்ளர் 452b என்ற கோளும் சூரியன் போன்று இருக்கும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதனையடுத்து பூமியில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருப்பது போன்று கெப்ளர் 452b என்ற கோளிலும் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது. இந்தக் கோள் பூமியை விட 60 மடங்கு பெரியதாக இருக்கிறது. மேலும் பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டு தூரத்தை கடந்து அந்த கோளுக்கு செல்வது சாத்தியம் கிடையாது என்றாலும், கெப்ளர் 452b என்ற கோளில் உயிரினங்கள் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்