Categories
தேசிய செய்திகள்

பூமியை தவிர வேற்று கிரகத்தில் ஹெலிகாப்டர் இயக்கி… புதிய சாதனையை படைத்த நாசா..!!

பூமியை தவிர வேற்று கிரகத்தில் ஹெலிகாப்டரை இயக்கி நாசா புதிய சாதனையை படைத்துள்ளது.

1976-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நாசாவின் ரோபோ தரையிறக்கப்பட்ட  பெர்சவரன்ஸ் ரோவர்,  செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியில் காணப்படும். மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிக தெளிவாக இது படம்பிடித்த அனுப்புகின்றது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டது.  இன்ஜெனியூனிட்டி  என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய அளவிலான ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்கிறது. தற்போது செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதல்முறை ஹெலிகாப்டரை இயக்கி நாசா சதனை படைத்துள்ளது.

Categories

Tech |