2021 தொடக்கத்தில் ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத விண்கல் 2021 CO247 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல ஈபிள் டவரின் உயரத்தில் இருந்து 83% உயரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விண்கல் பூமியில் இருந்து 74 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 3ம் தேதி 220 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று 69 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது.
இதேபோல 2021 AC என்ற மற்றொரு ராட்சத விண்கல் நாளை பூமியை தொட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது பூமியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இது போன்ற விண்கற்கள் பூமியை நெருங்கி வந்து செல்கின்றன. இருப்பினும் பூமியை நோக்கி நேராக வராத வரையில் விண்கற்களின் செயல்பாடுகளை பதிவு செய்வது கடினம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.