பூமியை நோக்கி பிப்ரவரி 22ஆம் தேதி ஒரு சிறிய கோள் நகர்ந்து வந்து கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் 2020 XU6 என்ற ஒரு சிறு கோல் தற்போது பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்தக் கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிப்ரவரி 22ஆம் தேதி நடக்க உள்ளது. 213 மீட்டர் நீளம் கொண்ட இந்த சிறிய கோள் சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 30,240 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த கோள் பூமியை தாக்கும் என அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.