Categories
கிரிக்கெட் விளையாட்டு

பூமி உள்ளவரை உன் கலை பேசும்… நீ நட்ட மரங்கள் பேசும்… ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்..!!

நடிகர் விவேக் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.

அவரின் உடல் இல்லத்தில்  அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். உங்களை எப்படி போற்றினாலும், குறைவாகத்தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி உங்களுக்கு பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். பூமி உள்ளவரை உங்கள் கலை பேசும். நீங்கள் நட்ட மரங்கள் பேசும் என்று தமிழில் பதிவிட்டுள்ளார் விவேக்.

Categories

Tech |