Categories
உலக செய்திகள்

பூமி பூஜை விழா ஸ்பெஷல்… அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள்…!!

ராமர் கோவில் பூமி பூஜை விழாவின் காட்சிப் படங்களை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் வெளியிட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி பூமி பூஜை விழாவில் முதற்கட்டமாக 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இந்த ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள், காட்சி படங்களாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டன.

Categories

Tech |