Categories
உலக செய்திகள்

பூரண நலம் பெறாமல் வீடு திரும்பிய டிரம்ப் ….!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜுப்யிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களில் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாகவே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பத்தில் டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டதாக எதிர்க் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் வருமான வரியை முறையாக செலுத்தாத பிரச்சனையும் சேர்ந்து டிரம்ப் பிரச்சார குழுவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த பொது விவாதங்களில் டிரம்புக்கு எதிராகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர் டொனால்டு டிரம்ப் முழுமையாக குணமடையாத நிலையில் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார். விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொற்று முழுவதும் குணம் அடைவதற்கு முன்பே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மீண்டும் டிரம்ப் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்புடன் அவரது பிரச்சாரக் குழுவினர் சிலருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசு கட்சிக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |