Categories
தேசிய செய்திகள்

பூரி ஜெகநாதர் கோவில்… 400 ஊழியர்களுக்கு கொரோனா… கோவிலை திறக்க வாய்ப்பில்லை…!!!

பூரி ஜெகநாதர் கோவிலில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை திறக்க வாய்ப்பில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது.

ஒடிசாவில் இருக்கின்ற பூரி ஜெகநாதர் என்ற ஆலயத்தின் பணி புரியும் 400 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என்று மாநில அரசு கூறியுள்ளது. இதுபற்றி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ஒடிசா அரசு,பூரியில் இருக்கின்ற ஜெகநாதர் கோவிலின் கருவறையில் போதுமான அளவிற்கு இடவசதி இல்லை என்று கூறியுள்ளது.

கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் கொரோனா அதிக அளவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கோவில் பணியாற்றும் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |