நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை இன்று நடந்து வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .ஆனால் திருவிழாவில் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இவ்வாறு மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.