பிரதமர் நரேந்திர மோடி பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும்செவலில் இருக்கும் பூலித்தேவன் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், பல்வேறு இயக்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என்று கூறியுள்ளார்.
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.
— Narendra Modi (@narendramodi) September 1, 2022