சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவேஉனக்காக சீரியலில் இருந்து நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் ஏராளமான உள்ளனர் . அந்த வகையில் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படிப்புக்காக நடிகை ஜோவிதா ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். திடீரென ஜோவிதா சீரியலில் இருந்து விலகுவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.