நடிகை ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுவதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சந்தோஷ், கார்த்திக், கிருத்திகா, மதன் பாண்டியன், மீனாகுமாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் வருந்தினி பரிணயம் சீரியலின் தமிழ் ரீமேக்தான் பூவே பூச்சூடவா.
இந்நிலையில் நடிகை ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் பரவி வந்தது. தற்போது இதுகுறித்து நடிகை ரேஷ்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து நான் விலகவில்லை’ என தெரிவித்துள்ளார்.