தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், முன் களப்பணியாளர்கள் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டேன். அனைத்தும் முன்களப் பணியாளர்கள், இணைய நோய் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி என்னும் கவசத்தை கொண்டு நம்மையும், நாட்டையும் பாதுகாப்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.