இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 422 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரனோ கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் இருப்பவர்கள் ஆகியோர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்ப குழு போஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எத்தனை மாத இடைவெளியில் செலுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தெரிந்த வட்டாரங்கள் கூறியது, இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீ ல்ட் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 2 டேஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த கால இடைவெளி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு பூஸ்டர் தடுப்பு ஊசி குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.