புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களை தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துறநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
Reached Hyderabad now.Proceeding to Ameerpet Community health center under Telangana Health dept to take my Booster dose of covid vaccine.Thank u honb @PMOIndia for supplying free vaccines for 18-59 yrs age group for 75 days to mark #AzadiKaAmritMahotsav . Vaccines saves lives
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 16, 2022
ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.